பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 8 - ராசா ராம் மோகன் ராய்
சமூக திருத்தங்களை மேற்கொண்ட நபர்களில் வித்யாசாகரை விட பிரபலமானவர் ராசா ராம் மோகன் ராய். அவர் குலின் பிராமண சமுதாயத்தில் பிறந்தவர். குலின் பிராமணர்கள் பல தலைமுறைகளாக டௌரி பெற்றே பிழைத்தவர்கள். டௌரி போதுமானதாக இல்லை என்றால் புதிய திருமணம் செய்து பழைய மனைவியை அடிமை சந்தையில் விற்று விடுவார்கள். அது போல் அவர் இளம் வயதில் அவர் தாயை விற்றதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து தன் வீட்டில் வாழ வந்த 2 பெண்களை அவர் தந்தை டௌரி கேட்டு கொடுமை படுத்தியதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அதனால் ஒரு இரவு அவர் தந்தை அருந்தும் மதுபானத்தில் ஒரு பெண்ணை விசம் கலக்க சொன்னார். அந்த மதுபானத்தை அருந்தி ராயின் தந்தை இறந்தார். அந்த பெண்களுக்கு விடியல் பிறந்தது என்ற நிம்மதியில் இருந்த ராய்க்கு அதிர்ச்சி - மற்ற உறவினர்கள் அந்த பெண்களை தர தரவென இழுத்து சென்று நெருப்பில் தள்ளி கொன்றனர் (சதி). இதை கண்ட ராய் பார்ப்பன வாழ்வு முறைகளை அழித்து ஆங்கிலேயர்களின் அறிவு சார்ந்த வாழ்வு முறைகளை பரப்புவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றுக்கொண்டார். பிண மொழியான சமசுகிருதத்தை நன்கு அறிந்த ராய் உபநிசத்களையும் வேதங்களையும் ஆரா...