பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 8 - ராசா ராம் மோகன் ராய்
சமூக திருத்தங்களை மேற்கொண்ட நபர்களில் வித்யாசாகரை விட பிரபலமானவர் ராசா ராம் மோகன் ராய். அவர் குலின் பிராமண சமுதாயத்தில் பிறந்தவர். குலின் பிராமணர்கள் பல தலைமுறைகளாக டௌரி பெற்றே பிழைத்தவர்கள். டௌரி போதுமானதாக இல்லை என்றால் புதிய திருமணம் செய்து பழைய மனைவியை அடிமை சந்தையில் விற்று விடுவார்கள். அது போல் அவர் இளம் வயதில் அவர் தாயை விற்றதை பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டார். தொடர்ந்து தன் வீட்டில் வாழ வந்த 2 பெண்களை அவர் தந்தை டௌரி கேட்டு கொடுமை படுத்தியதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அதனால் ஒரு இரவு அவர் தந்தை அருந்தும் மதுபானத்தில் ஒரு பெண்ணை விசம் கலக்க சொன்னார். அந்த மதுபானத்தை அருந்தி ராயின் தந்தை இறந்தார். அந்த பெண்களுக்கு விடியல் பிறந்தது என்ற நிம்மதியில் இருந்த ராய்க்கு அதிர்ச்சி - மற்ற உறவினர்கள் அந்த பெண்களை தர தரவென இழுத்து சென்று நெருப்பில் தள்ளி கொன்றனர் (சதி). இதை கண்ட ராய் பார்ப்பன வாழ்வு முறைகளை அழித்து ஆங்கிலேயர்களின் அறிவு சார்ந்த வாழ்வு முறைகளை பரப்புவதையே தன் வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றுக்கொண்டார்.
பிண மொழியான சமசுகிருதத்தை நன்கு அறிந்த ராய் உபநிசத்களையும் வேதங்களையும் ஆராய்ந்து அவைகளில் கூறப்பட்டுள்ள நல்ல நெறிகளை எடுத்துரைத்தார். கடவுள் ஒன்று தான் என்று நிரூபிக்க பைபிளையும் குரானையும் ஆராய்ந்தார். மூட நம்பிக்கைகளில் மூழ்கியுள்ள இந்து இந்தியர்களின் கண்களை திறக்க இந்தியா வந்திருந்தார் கிறிச்துவ போதகர் வில்லியம் கேரி. அவர் ராயிடம் இந்திய சட்டத்தில் மாற்றங்கள் செய்ய உதவி கேட்டார். மனு ச்மிருதியை அடிப்படையாக கொண்ட சட்டங்களை அடையாளம் கண்டு அவை அகற்ற பரிந்துரைத்தார் ராய். இவரின் முயற்ச்சிகளால் தான் 50 ஆண்டுகள் கழித்து ஈச்வர்சந்திர வித்யாசாகர் சதியை ஒழித்தார் (ஆனால் வித்யாசாகர் பார்ப்பனர்களிடம் ஆதிக்கத்தை தக்க வைப்பதற்காக தான் சதியை ஒழித்தார்).
ஆங்கில அரசின் முர்சிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சு எழுத்தாளராக பணி சேர்ந்தார் ராம் மோகன் ராய். அங்கு தீர்ப்பு நகல்களை மாகாண மொழியான வங்காளி மொழிக்கு மொழிமாற்றும் போது பார்ப்பனியத்தை ஒழிப்பதற்காக பார்ப்பனர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை பார்ப்பனர்களுக்கு எதிரானது போல் மொழிமாற்றினார். இந்த நகல்களை பெற்றுக்கொண்ட ஆங்கில அரசு வரி அதிகாரிகள் பார்ப்பனர்களின் சொத்துகளை கையகப்படுத்தினார்கள். இதனால் வங்காளி பார்ப்பனர்களின் ஆதிக்கம் அழிய தொடங்கியது. ஆதிக்கத்தை மீட்கும் வேலையில் இறங்கினார்கள் பார்ப்பனர்கள்.
ராயை தடுக்க பார்ப்பனர்கள் மத தலைவர்களின் உதவியை நாடினார்கள். ராயை புறக்கணிக்குமாறு முர்சிதாபாத் இந்துக்கள் அனைவரிடமும் கட்டளையிட்டார்கள் மத தலைவர்கள். ராயிற்கு தேவையான தண்ணீர், ஆடைகள், உணவு பொருட்கள், கழிவு அகற்றுதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்க மறுத்தனர் இந்துக்கள். அவதியில் தவித்த ராய் ஆங்கில அரசின் கையாட்டி பொம்மையாக விளங்கிய முகலாய அரசர் அக்பர் 3-இடம் தஞ்சம் அடைந்தார். அங்கு அக்பர் 3 அக்பர் 1ன் தின்இலாகி என்ற ஒரு உலகம் ஒரே கடவுள் என்ற தத்துவத்தை கற்று கொடுத்தார். இந்த தத்துவம் தான் பிற்காலத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புதுப்பிக்கப்பட்டது. இந்த தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிய ராய் ஆத்மிய சபை மற்றும் பிரம்மோ சபை என்ற அனைத்து மதங்களையும் சமமாக பார்க்கும் இரு நாகரீக ஆன்மீக சபைகளை தொடங்கினார். நாகரீக வழிபாடு முறைகளை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்திலேயே இரு சபைகளும் பிரபலமடைய தொடங்கியது. பதிலுக்கு பார்ப்பனர்களின் அழுத்தமும் பலமானது. இந்துக்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பலர் இந்த இரு சபைகளில் சேர்ந்தனர். அதனால் பெரும்பாலான இந்து மத தலைவர்கள் ராயின் தத்துவத்தால் மதிப்பும் செல்வாக்கும் இழந்தனர். வேறு வழியின்றி வங்காளத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். சிலர் மேற்கத்திய நாடுகளுக்கு போனார்கள். இது தான் வரலாற்றில் இந்து மத தலைவர்கள் கடல் தாண்டிய முதல் முறை. பதட்டம் அடைந்த பார்ப்பனர்கள் புதிய சதி திட்டம் தொகுத்தார்கள். அப்போதைய ஆளுநர் ஆர்டிஞ்சை சந்தித்து முகலாய அரசர் அக்பர் 3ஐ ராய் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டுகிறார் என்று கூறினார்கள். விசாரணையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராய் பொய்யாக நகல்களை மொழிமாற்றினார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் ராயை ஆங்கில அரசுக்கு துரோகம் செய்ததாக கூறி நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பளித்தது. தப்பிப்பதற்காக அக்பர் 3 ராயை முகலாய அரசின் தூதராக அறிவித்து இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு ப்ரிச்டல் நகரில் சில மாதங்கள் வாழ்ந்து வந்த நிலையில் வங்காளத்திலிருந்து இடம்பெயர்ந்த இந்து தலைவர் ஒருவர் ராயை அடையாளம் கண்டார். ராய் சென்ற மதுபான கடைக்கு சென்று அவர் அருந்தும் மதுபானத்தில் விசம் கலந்தார். அதை அருந்திய ராய் அவர் தந்தையை கொன்றது போலவே அவரும் விசம் அருந்தி இறந்தார். புதிய இந்தியாவில் நாம் காணும் சமூக நீதியின் அடிக்கல் நாட்டியவர் ராசா ராம் மோகன் ராய். அவரை 1800களின் தந்தை பெரியார் என்று புகழலாம்.
Comments
Post a Comment