பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 7 - ஈச்வர்சந்திர வித்யாசாகரின் பித்தலாடல்கள்

 சமூகத்தில் பரவியிருந்த சாதி வன்கொடுமைகளை அழிக்க போராடியவர்களில் ஈச்வர்சந்திர வித்யாசாகர் என்ற பெயரை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவர் செல்வாக்கு பெறுவதற்கு தான் இந்த வேடத்தை போட்டார். பார்ப்பன குடும்பத்தில் பிறந்த இவருக்கு தாய்மொழியான வங்காள மொழியை விட பிண மொழியான சமசுகிருதம் மேல் அதிக பற்று. 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரசிடன்சி கல்லூரியில்  சமசுகிருத பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவர் மனு ச்மிருதி, வேதாந்த சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்பினார். எதிர்காலத்தில் இதில் பல மாணவர்கள் தீவிர இந்து மதவாதத்தை உட்கொண்டு வங்காளத்தில் இசுலாமியர்கள் மேல் பல தாக்குதல்கள் நடத்தினார்கள்.

விதவை மறுமணம் மனு ச்மிருதியில்  தடை செய்யப்பட்டதாக இருந்தும் அதற்கு ஆதரவாக நடந்தார் வித்யாசாகர். இதற்கு காரணம் ஆளுனர் தாலௌசி காலத்தில் அமல்படுத்திய தவறுதல் கோட்பாடு. பார்ப்பன விதவைகளிடமிருந்து இந்திய-ஆங்கில அரசு சொத்துக்களையும் நிலங்களையும் கையகபடுத்தினால், பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தை பாதிக்கும் என்று எண்ணினார். உண்மையில் இவர் பார்ப்பன விதவைகளுக்கு மட்டும் மறுமண அதிகாரத்தை வாங்கி கொடுத்தார். மற்ற சமூக விதவைகளின் சொத்துக்களை அரசாங்கம் கையகபடுத்துவதை அவர் ஆதரித்தார். இதனால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கூடுவது மட்டும் இல்லாமல் மற்ற சமூகத்தினரின் செல்வங்கள் சுருங்கின. மேலும், ஆங்கில அரசு ஆங்கில கல்வி அனைத்து இந்தியர்களுக்கும் வழங்க முன்வந்த போது கீழ் சாதியினருக்கு கல்வி வழங்குவதை எதிர்த்தார். மனு ச்மிருதி அனுமதிக்காத எதையும் செயல் படுத்த கூடாது என்று போராட்டங்கள் நடத்தி இந்த திட்டத்தை அரசாங்கம் திரும்பி பெற வைத்தார்.

ஆதிக்கத்தை பார்ப்பன சமூகத்திலேயே நிலையாக தக்க வைக்கவே குழந்தை திருமணத்தை எதிர்த்தும் போராடினார் வித்யாசாகர். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சார்கண்டில் ஒரு வனப்பகுதி கிராமத்தில் குடியேறினர். அங்கு வனவாழ்  மக்களுக்கு பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் அமைத்து தருவதாக கூறி அந்த மக்களிடம் கிட்டத்தட்ட 80000 ரூபாய் (1870 ரூபாயின் மதிப்பு) வரை வசூலித்தார். வனப்பகுதி நிலங்களையும் தன்வசம் கையகப்படுத்தினார். அந்த பள்ளிக்கூடங்களில் பெரும்பாலான வகுப்பறைகளில் பார்ப்பன குழந்தைகளுக்கு ஆரிய வேதங்களை கற்று தர பாடசாலைகள் நடத்தப்பட்டன. ஒரிரு வகுப்பறைகளில் மட்டுமே வனவாழ் குழந்தைகள் பெயரளவில் படித்தன. மருத்துவமனைகளிலும் அறிவியல் சார்ந்த ஆங்கில மருத்துவம் வழங்காமல் ஆரிய மூடநம்பிக்கைகள் மிகுந்த ஆயுர்வேதம் மற்றும் ஓமியோபதி மருத்துவம் வழங்கி அப்பாவி மக்களிடம் மோசடி செய்தார். ஆனால் இதுபோல் சமூக சேவை செய்வது போல் நடித்து பல அங்கீகாரங்களும் விருதுகளும் ஆங்கில‌ அரசிடம் பெற்றார். ராமகிருட்டிண பரமகன்சரிடம் பழக்கம் ஆனார். அவருடன் சேர்ந்து ராமகிருட்டிணரின் மாணவர்களை மூளைச்சலவை செய்து வருங்கால இந்து பயங்கரவாதத்தையும் ஆங்கில- கிறிச்துவ-இசுலாமிய வெறுப்பையும் விதைத்தார்.
ஆனால் இன்று நாம் அனைவரும் வித்யாசாகரை விடுதலை தியாகி என்றும் சீர்திருத்தவாதி என்றும் தான் படிக்கிறோம். இது பார்ப்பனர்கள் கல்வியில் அவர்களுக்கு சாதகமாக திருத்திக் கொண்டதால் தான். இதனால் தான் உண்மைகளை தெரிந்து கொள்ள பெரியார், கலைஞர், வீரமணி, சுப வீரபாண்டியன் போன்ற திராவிட ஆசிரியர்கள் இயக்கிய வரலாறு நூல்களை படிப்பது அவசியம்

Comments

Popular posts from this blog

உதயர் தான் அடுத்த பெரியார்

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)