பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)
உணவு அறையில் மாட்டுக்கறியை சைவர்களின் உண்ணும் இடத்தில் வைத்துவிட்டு "அரே ராம் யே க்யா அபசார் ஐ?" என்று அலரினார். இஸ்லாமியர்கள் மேல் பழி போட்டார். இதை நம்பிய இஸ்லாமியர் அல்லாதவர்கள் சாபர் இருக்கும் திமிரில் தான் இப்படி இஸ்லாமியர்கள் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். இரு கும்பலுக்கும் அடிதடி குத்துடன் மோதல் நடந்தது. தகவலறிந்த ஆளுனர் காணிங் கம்பெனி படை தலைவர் வீலரை நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர சொன்னார்.
அங்கு விரைந்து வந்த வீலர் அனைவரும் அமைதியாக இருக்க ஆணையிட்டார். ஆவேசத்தில் இருக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் வீலர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று பாண்டே கூறினார். அவர்கள் பாண்டேவிடம் வீலரை கொள்ள தூண்டினார்கள். வீலரை கொன்றால் தனக்கு ஆதரவு பெருகும் என்று பாண்டே யோசித்தார். தன் என்பீல்ட் துப்பாக்கியை வீலரை குறி வைத்து நீட்டினார். அதிர்ச்சியில் பயந்த வீலர் பாண்டேவை கட்டுபடுத்துபவருக்கு 10000 ரூபாய் (அன்றைய மதிப்பு) பரிசு அறிவித்தார். இஸ்லாமியர்கள் துப்பாக்கியை விடுமாறு கெஞ்சினார்கள். மற்றவர்கள் இன்னமும் வீலரை சுட தூண்டினார்கள். பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
அப்போது சேக் பல்டூ என்ற இஸ்லாமியர் ஒருவர் எதிரியாக இருந்தாலும் உயிரை காப்பாற்றவது இஸ்லாமியரின் கடமை என்று உணர்ந்து பாண்டே மேல் பாய்ந்து கட்டுபடுத்த முயன்றார். கோபமடைந்த இஸ்லாமியர் அல்லாதவர்கள் பல்டூவை தீவிரமாக தாக்கினார்கள். காயமடைந்த பல்டூ பாண்டேவை விடுவித்தான். பாண்டே தெளிவுக்கு வருவதற்கு முன் வீலரின் அதிகாரிகள் பாண்டேவை பிடித்தனர். தன் சதி திட்டம் தோல்வியடைந்ததை பார்த்து சோகம் அடைந்தார். வேறு வழியின்றி குழப்பம் உண்டாக்க நினைத்து சுற்றி நிற்கும் எல்லோரையும் சராசரியாக சுட தொடங்கினார். வீலரின் அதிகாரிகள் பாண்டேவின் துப்பாக்கியை பிடுங்க போராடினார்கள். போராட்டத்தில் தவறுதலாக திடீரென்று இரு குண்டுகள் பாண்டேவின் தொண்டையில் பாய்ந்தன. உடனே உயிரை காப்பாற்றி நீதிமன்றத்தில் நிறுத்த மருத்துவமனையில் பாண்டேவை சேர்த்தனர். இரு வாரங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் கம்பெனி தலைவரை கொலை முயற்ச்சியில் பாண்டே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். பகதூர் சா சாபரும் கம்பெனியிடம் சரணடைந்தார்.
Comments
Post a Comment