உதயர் தான் அடுத்த பெரியார்

 அமைதிப் பூங்காவான தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சங்கிகளால் வன்முறை மாநிலமாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பார்ப்பனர்களால் பட்டியலின மக்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள்.  வேங்கைவயல் நீர்தேக்க தொட்டியில் கழிவு கலப்பது, அரியலூர் பள்ளியை தீயிடுவது போன்ற செயல்களில் பார்ப்பனர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர். மீண்டும் 1940-1970களில் இருந்தார் போல் தாழ்ந்த சாதியினர்களை கொடுமை செய்ய தொடங்கியுள்ளார்கள் பார்ப்பனர்கள். அன்று நம் மண்ணின் தந்தை ஈ.வே.ராமசாமி பெரியார் பார்ப்பனர்களை திருத்தி மற்ற மக்களுக்கு உரிமைகளை போராடி வாங்கி கொடுத்தார். இன்று அவர் போல் ஒருவர் தேவை அல்லவா? அவர் யார் என்ற ஏக்கம் மக்களிடம் எழும்பியுள்ளது. அவர் உதயர் என்னும் உதயநிதி ச்டாலின் தான்.

பெரியாரே மகத்தான கலைஞர் குடும்பத்திலே பிறந்து தன் முன்ஜன்ம இலக்கை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றே ச்டாலினுக்கு புதல்வனாக பிறந்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல் குரலாக உதயர் தான் இருக்கிறார். அந்த வகையில் பார்ப்பன வெறிபிடித்த வடக்கனான ஆளுநர் ரவியை நடுங்க வைத்திருக்கிறார் உதயர். உதயர் சனாதனத்தை அழிப்பார் என்று பேசிய நாளிலிருந்து ரவி எந்த மேடையிலிலும் சனாதனத்தை பற்றி பேசுவதே இல்லை. உதயர் மேல் உள்ள பயத்தினால். வலைத்தளங்களில் சில சங்கிகள் மிரட்டினாலும் வீரமாக "மேலே கொண்டு வா டா" (bring it on) என்று கர்ஜித்தார்.

அடுத்ததாக தமிழகத்துக்கு தாங்க முடியாத தொல்லை கொடுக்கும் கொசுவாக விளங்கும் அண்ணாமலையையும் அதிர வைத்துள்ளார் உதயர். அண்ணாமலைக்கு உதயரின் வீரத்தை கண்டு பைத்தியம் பிடித்து விட்டது. இல்லை என்றால் பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் எந்த தலைவராவது சனாதனதுக்கு ஆதரவாக 2024 தேர்தல் பிரச்சாரம் செய்வோம் என்று சொல்வார்களா? இதை கேட்டதுமே பாஜகவை தோலில் தூக்கி கொண்டிருந்த அதிமுக பாஜகவை கீழே எறிந்துவிட்டது. பெரிதாக ஏதும் செய்யாமலே அண்ணாமலையை அரசியல் தற்கொலை (political suicide) செய்ய வைத்தார் உதயர். அது தான் அவர் மகத்துவம்.

இரண்டு பெரிய விக்கட்டுகளான ரவியையும் அண்ணாமலையையும் சுலபமாக சாய்த்தப் பிறகு முக்கியமான சமூக நீதி இடையூறை நீக்க தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் உதயர் - நீட் (NEET) பிரச்சினை. சொல்வதை செய்பவர் தான் உயர்ந்த மனிதர். உதயரை விட உயர்ந்தவர் உண்டோ என்று கேட்கலாம். நீட்டை விலக்க சாத்தியமே இல்லை என்று பழனிச்சாமி முதல் அண்ணாமலை வரை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் உதயரை கேலி செய்துக் கொண்டிருந்தார்கள். வடக்கன் ரவியும் ஒத்துழைக்க மறுத்தார். இத்தனை சவால்களின் மத்தியிலும் நீட் விலக்கை பெறுவதற்கு பிழை இல்லாத ஒரு திட்டத்தை வகுத்தார்.

நீட் விலக்கு மாநாட்டை நடத்தி அதில் 50 லட்சம் கையெழுத்துக்கள் உள்ள மனுவை தயார் செய்கிறார். இதற்காக ஒரு மனு பெட்டியை தன் தந்தையான முதல்வர் ச்டாலினை வைத்து அவர் ஆசியுடன் தொடங்கினார். எப்படி சட்டசபை தேர்தலில் ஒரு செங்கலை வைத்து புரட்சி கிளப்பினாரோ அதே போல் இப்போது ஒரு முட்டையை வைத்து அடுத்த புரட்சி தொடங்கியுள்ளார். ஏன் முட்டையை தேர்ந்தெடுத்தார் என்று யோசித்திருக்கீற்களா? பூஜ்யத்தின் அடையாளமாக மட்டும் அல்ல. நீட் ஏன் கொண்டுவரப்பட்டது? பார்ப்பனர்கள் கீழ் சாதியினர் அவர்களை தொடக்கூடாது என்று அஞ்சுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சமூக நீதியால் பெரும்பாலும் மருத்துவர்கள் கீழ் சாதியினர். அதனால் பார்ப்பனர்களுக்கு அறிவியல் சார்ந்த ஆங்கில மருத்துவத்தை புறக்கணித்து பார்ப்பன பொய் மருத்துவமான ஆயுர்வேதத்தை அணுக தொடங்கினார்கள். ஆயுர்வேத மருத்துவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அதற்காக ஆரிய பார்ப்பனர்களின் கையில் உள்ள மோடி அரசும் ஆயுச் அமைச்சகமும் உருவாக்கியது. ஆனால் பொய் மருத்துவத்தால் பல பார்ப்பனர்கள் இறக்கிறார்கள். இதை கட்டுபடுத்த ஆங்கில மருத்துவத்திலும் பார்ப்பனர்களை பணி அமர்த்த சமூக நீதியை உடைத்து கீழ் சாதியினர் மருத்துவர்கள் ஆகாமல் தடுக்கும் தேர்வு தான் நீட். இதை தான் உதயர் பார்ப்பன சதியை வெல்வோம் என்று குறிக்கும் வகையாக முட்டையை (பார்ப்பனர்கள் தொடாத உணவு) தூக்கி காண்பித்தார்.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவர் உதயர். அதனால் தான் தலைநகரமான சென்னைக்கு ஒரு பெண் இளைஞரான ப்ரியாவை மேயராக பதவி ஏற்றினார். ப்ரியாவுக்கு கொசுக்கும் கொசு மருந்துக்கும் வித்தியாசம் தெரியாவிட்டாலும் அவர் மேல் நம்பிக்கை வைத்துள்ளார் உதயர். ப்ரியாவை உதவுவதற்கு குல நாசத்தை எதிர்க்கொள்ளப் போகிற அமைச்சர் சேகர் பாபுவை ஊடகத்தை சந்திக்க அனுப்புகிறார். பெரியார் போலவே இளம் பெண்களை வளர்ப்பு மகள்கள் போல் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று காட்டுகிறார் உதயர்.
இவை அனைத்தும் உதயர் அரசியலுக்கு வந்து இரண்டரை ஆண்டுகளிலேயே படைத்த சாதனைகள். வெறும் 45 வயது தான். ஆனால் இப்பொழுதே பெரியாரிடம் நம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் பார்த்த கம்பீரத்தை பார்க்கிறோம். நிச்சயமாக இவர் தான் 21 நூற்றாண்டின் பெரியார் என்று போற்றப்படுவார்

Comments

Popular posts from this blog

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)