பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 3 - சான்சி ராணி மரணத்தின் பார்ப்பன சதி (2)
அவள் தந்தையான சான்சி மன்னரை கொன்ற சதியை அறிந்த இளவரசி ராணி லக்குமிபாய் சான்சிக்கு விரைந்தாள். அங்கு கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அரண்மனையின் பெயர் பலகையில் "கிழக்கு இந்தியா கம்பெனி - மிராச்தர் ருத்ரப்ரதாப் சர்மா கோட்டை" என்ற பிராமணருக்கு மாற்ற பட்டிருந்தது. நுழைவு வாய் காவலர்களை வாலால் அறுத்து உள்ளே சென்ற இளவரசி ருத்ரப்ரதாப்பை கண்டு பிடிப்பதற்கு முன்னால் கம்பெனி படையால் துரத்தபட்டாள். அங்கிருந்து தப்பிய லக்குமி க்வாலியரில் ஷா ஆலாம் கட்டிய பழைய கோட்டையில் காலம் கழித்து, புறாக்களின் கால்களில் கடிதங்கள் கட்டி சான்சியில் அவளிடம் விசுவாசம் கொண்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த அமைச்சர் மூலம் தன் படையை பெரிதாக்கி வலுபடுத்தினாள்
அதே நேரத்தில் தாத்யா தோபே என்ற செல்வாக்கு பெற பேராசையால் ருத்ரப்ரதாப் மேல் பொறாமை கொண்ட இன்னொரு பார்ப்பனர் இருந்தார். ருத்ரப்ரதாப்பை வீழ்த்த ராணி லக்குமிக்கு படைகள் அனுப்பினார். ராணியும் இணைந்து கம்பெனி படைகளை அபாரமாக வென்று கொண்டிருந்தன. அச்சம் அடைந்த ருத்ரப்ரதாப் தாலௌசியிடம் உதவி கேட்டார். விரைவாக சான்சிக்கு சென்றடைய கான்பூரிலிருந்து கங்கையில் படகுகளில் படைகள் புறபட்டன. சிரிது தூரம் சென்றதும் கங்கையில் தோபேயின் முன்னாள் தலைவர் நாநா சாகேபால் தடுப்பு கட்டபட்டிருந்தது. என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த படைகளை நாநாவின் காட்டுமிராண்டிகள் அறிவாலால் அங்கம் அங்கமாக வெட்டி கொன்றன. இது "கான்பூர் படுகொலை"யில் பலருக்கு தெரியாத பார்ப்பனர்களால் மறைக்கப்பட்ட ஒரு சம்பவம்.
ருத்ரப்ரதாப் உதவிக்கு படைகள் சேர முடியாமல் போனதால் ராணி லக்குமிக்கு வெற்றியின் வாசனை வர தொடங்கியது. என்னேரமும் பேராசையை மறக்காத தோபே ருத்ரப்ரதாப்பை வீழ்த்தியதும் லக்குமிபாய் தன்னை சான்சியின் ராணி என்று அறிவித்து கொள்வதற்கு முன் அவன் படைகளை விலக்கி கொண்டான். கங்கை தடுப்பும் அகற்றப்பட்டது. விரைந்து வந்த க்யூ ரோச் தலைமையிலான கம்பெனி படைகள் சான்சியை அடைந்தன. கோட்டையை சுற்றி வளைத்தன. தகவலறிந்த ராணி கோட்டை 3வது மாடியிலிருந்து குதிரையின் குதித்து ஓடினாள். ஆனால் கம்பெனி படைகள் வழி மறித்தன. ஆங்கிலேயர் கையால் இறக்க விருப்பம் இல்லாததால் தானே தீ வைத்துக்கொண்டு பரிதாபமாக இறந்தாள் இந்தியாவின் மிக பிரபலமான வீராங்கனை - பார்ப்பன சதியால்.
சில நாட்களில் தாலௌசியிடம் ருத்ரப்ரதாப் கான்பூர் படுகொலையில் தோபேயின் பங்கை கூறினான். கம்பெனி படை தோபேயை பிடித்து தூக்கிலிட்டது.
Comments
Post a Comment