பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 6 - 1857 க்கு பின் ஆதிக்கம் தேடுதல்கள்
1857 ஆம் ஆண்டில் கான்பூர் படுகொலை போன்ற பல வன்முறையான கலவரங்கள் நடந்தன. நவீன தொழில்நுட்பங்களை கொண்ட கம்பெனி படைகள் அனைத்து கலவரங்களையும் அடக்கியது. 1858 ல் இங்கிலாந்தின் அரசே நேரடியாக இந்திய மாகாணங்களை ஆள தொடங்கியதிலிருந்து போராட்டங்களும் புரட்சிகளும் ஓரளவு ஓய்ந்தன. அதனால் பிராமணர்களும் வேறு எதாவது புது வழியில் ஆதாயம் தேட தொடங்கினார்கள். இதில் இரண்டு விதமாக பார்ப்பனர்கள் உயர் இடங்களை எட்டினார்கள். முதல் வழி - இந்திய சமூக சேவை (indian civil services, ICS) ஆங்கிலேயர்களுக்கு மட்டும் தகுதி இருந்த நிலையில் பார்ப்பனர்கள் மட்டும் இந்த தேர்வை எழுத தகுதி கேட்டு பெற்றனர் (சமசுகிருதம் போல் ஆங்கிலம் கற்கவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தகுதி இருந்தது). இத்தேர்வில் வெற்றி பெற்ற பல பார்ப்பனர்கள் அதிகாரத்தை அப்பாவி மக்கள் மேல் காண்பிப்பதையும் மற்ற மத மக்களையும், தாழ்ந்த சாதி மக்களையும் ஒடுக்குவதையே வாடிக்கையாக வைத்து கொண்டார்கள். இவர்கள் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக ICS அதிகாரத்தில் தொடர்ந்தனர். இங்கிலாந்தில் அதிகாரிகள் வீட்டில் முழு நேர வேலைக்காரர்கள் வைத்து கொள்வது 1800க்கு முன்னாலே தடை ஆனது. ஆனால் ICSல் பார்ப்பனர்கள் உயர் சாதியை காரணம் கூறி இது போன்ற வேலைக்காரர்கள் கேட்டார்கள். இங்கிலாந்த வேலைகாரர்களுக்கு சம்பளம் தர நிதி இல்லை என்று கூற, ICS பிராமணர்கள் வேலைகாரர்களை சம்பளம் வழங்காமல் கொத்தடிமைகளாக வைத்துக் கொண்டனர். இந்த பழக்கம் தான் சுதந்திர இந்தியாவிலும் பார்ப்பன IAS அதிகாரிகளிடம் சமீப காலம் வரை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆதாயம் அடைந்த இரண்டாவது முறை - சமூக சீர்திருத்த தலைவர்களாக பல பார்ப்பனர்கள் தோன்றினர். இவர்களில் பலர் தன் முன்னோர்கள் ஏற்கனவே உயர் ஆங்கிலேயர்களிடம் உயர் இடத்தை எட்டியவர்கள். ஆங்கில பள்ளியில் படித்து இங்கிலாந்திலும் உயர் படிப்பு படித்து நாடு திரும்பியவர்கள். இவர்களில் பெரும்பான்மையினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கவே சமூக சீர்திருத்தத்தை கையாண்டனர். ஆனால் சிலர் உண்மையிலேயே பிராமணர்களின் அநியாயங்களையும் மனுவாதத்தின் கொடுமைகளையும் சிந்தனை மற்றும் பகுத்தறிவு மூலம் ஒழிப்பதை லட்சியமாக கொண்டனர். இவர்களில் பலர் இந்த மண்ணின் தந்தையான பெரியாரின் முன்னோடிகளாக இருந்தன.
Comments
Post a Comment