இந்திய தேசிய காங்கிரசின் பார்ப்பன பின்னணி - 1

 இன்று சிறுபான்மையினரின் காவலராக பெருமை இருக்கும் இந்திய தேசிய காங்கிரசு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஆளுமையிலும் கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட கட்சி. அன்று ஆதிக்கத்தினால் செல்வங்களை குவித்த பார்ப்பனர்கள் பலர் இங்கிலாந்திலும் புதிதாக முன்னேறி வந்து கொண்டிருந்த அமெரிக்காவிலும் படித்து வந்தார்கள். அந்த காலங்களில் கம்பெனி ஆட்சியிலிருந்து அரசி விக்டோரியாவின் ஆட்சிக்கு மாறியதில் பல நிர்வாக திண்டாட்டங்களை சந்தித்தனர் பிரிட்டிசு இந்திய மாகாணங்களின் ஆளுநர்களும் செயலர்களும். மேலும், அக்காலத்தில் 1857க்கு பிறகு பல இந்து மத போதகர்களின் தூண்டுதல்களால் மீண்டும் சுதந்திர போராட்டங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. இவை இரண்டையும் சமாளிக்க சில மாற்றங்களை கொண்டு வந்தது பிரிட்டிசு அரசு.

முதலாக ஆரசு பணிகளில் வளர்ந்த நாடுகளில் படித்த இந்தியர்களை அதிகரிக்க சட்டத்தை மாற்றினார்கள். அடுத்து அது போன்ற இந்தியர்கள் பிரிட்டிசு அனுமதியுடன் மக்கள் கழகங்கள் (அரசியல் கட்சிகள் அல்ல) தொடங்க அனுமதித்தார்கள். இவை இரண்டும் அனைத்து இந்தியர்களுக்கு பொருந்தினாலும், செல்வங்கள் வாய்ந்த வெளிநாடுகளில் படித்த பிராமணர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்தது.

இந்த இரண்டு சட்ட மாற்றங்களால் இந்திய சமூகவியல் சேவையையும் நீதித்துறையின் கீழ் கிளைகளையும் பிராமணர்கள் ஆக்கிரமித்தார்கள். தாமதமாக இருந்தால் பிற சமூகத்தினரும் கழகங்கள் தொடங்கி அரசியல் செல்வாக்கு பெறுவார்கள் என்ற கவலை பிராமண வட்டங்களில் திகழ்ந்தது. அதனால் முன்கூட்டியே தேசிய கழகம் ஒன்று தொடங்க நினைத்தார்கள் பார்ப்பனர்கள். விரைவாக பிரிட்டிசு அனுமதி பெற இயூம் என்ற ஆங்கிலேயரிடம் பேரம் பேசி அவரையும் கழக தலைவராக நியமித்தார்கள். ஆங்கிலேயரான இயூம் மற்றும் அரசு பணியில் அதிகம் உள்ள பார்ப்பனர்களால் காங்கிரசுக்கு மட்டும் மாநாடு நடத்தவும் பொதுவெளியில் பிரச்சாரம் செய்யவும் தடையில்லாமல் அனுமதி கிடைத்துக்கொண்டே இருந்தன. நிதி திரட்டுவதிலும் தடையில்லை. வரி ஏய்ப்பையும் பிராமண வரி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடின உழைப்பினால் நிதியை துளித்துளியாக சேர்த்து தொடங்கப்பட்ட மற்ற சமூகத்தினரின் கழகங்களின் நிலமை அப்படி இல்லை. பிரச்சாரம் செய்ய அனுமதி தர மறுத்தார்கள். மீறினால் கைது செய்யப்பட்டார்கள். நிதியில் அதிகமான வரி வசூலித்தார்கள்.   இப்படி வளர தொடங்கிய மற்ற அனைத்து சமூகத்தினரின் கழகங்களை இரும்பு கையால் நசுக்கி அழித்தார்கள் காங்கிரசு. அனைத்து சவால்களையும் நேராக சந்தித்து அழியாமல் நின்றது ஒரு கழகம் மட்டுமே - இந்திய முசுலிம் லீக்.  இதனால் இந்த இரு கழகங்கள் இடையே மோதல்கள் அதிகரித்தன. நாகரீகமற்ற குற்றச்சாட்டுகள், கழக உறுப்பினர்கள் இடையே வன்முறை போன்ற சம்பவங்களில், இந்தியர்கள் ஆங்கில அரசிக்கு மேல் இருந்த எதிர்ப்பை சற்று மறந்துவிட்டனர். இப்படிப்பட்ட தனக்கு சாதகமான சூழ்நிலை நிலைக்க இரு கழகங்களையும் சமமாக பார்த்து சுமுகமாக நடந்துக் கொண்டது பிரிட்டிசு அரசு. ஆனால் வன்முறைகள் தொழிற்சாலைகளையும் பொருளாதாரத்தையும் மிகவும் பாதித்தது. அதனால் பதட்டத்தை தணிக்க நற்பெயர் கொண்ட ஏதாவதொரு நபரை காங்கிரசுக்குள் சேர்க்க அறிவுருத்தியது பிரிட்டிசு அரசு. ஆகையால் 1906ல் இந்தியாவுக்கு திரும்பி வர‌ அழைத்தார்கள் இங்கிலாந்தில் படித்து பயின்ற மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்ற வக்கீலை. 

காந்தியடிகள் 1915ல் நாடு திரும்பிய பின்  முதலில் ஆளுநர் ஆர்டிஞ்சை சந்திக்க இருந்தார். 1905ல் சமூக நீதியை கடைப்பிடிக்க ஆளுநர் கர்சான் வங்காளத்தை பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றி இரண்டாக பிரித்து கிழக்கு பகுதியை இசுலாமியர்களுக்கு வழங்கினார். அதனால் விரக்தியடைந்த பிராமணர்கள் கிழக்கு வங்காளத்தை மீண்டும் தன் வசம் ஒப்படைக்க ஆளுநர் மிண்டோவிற்கு அழுத்தம் தர வேண்டுமென்று காந்தியிடம் வேண்டினார்கள்.  தகவல் அறிந்த முசுலிம் லீக் கழகத்தினர் காந்தியின் மாளிகையை முற்றுகையிட்டு அவரை சந்திக்க ஆர்பாட்டம் செய்தனர் (அந்த காலத்தில் காந்தி துறவி வேடம் அணிய தொடரவில்லை). இசுலாமியர்களின் கோரிக்கைகளை தெரிந்துக்கொள்ள லக்னோவில் நடக்கும் மாநாட்டுக்கு காந்தியை அழைத்தார்கள். ஆனால் அவர் ஆர்டிஞ்சின் உத்தரவு பெறாததால் வர மறுத்துவிட்டார். இதனால் காங்கிரசின் பார்ப்பன ஆதரவாளர்கள் காந்தியை காங்கிரசின் வழிகாட்டியாக நியமித்தார்கள். 1915களில் காங்கிரசில் கோகலே தலைமையில் மென்மைப்போக்கு அணி பால் கங்காதர திலக் தலைமையில் பயங்கரப் போக்கு அணி என இரு அணிகள் இருந்தன. பயங்கரப் போக்கு அணியில் பார்ப்பனர்களின் கட்டுப்பாடு அதிகம். கிழக்கு வங்காளத்தை ஆயுதம் ஏந்திய புரட்சி வழியாக மீட்டெடுக்க கூறி வந்தன. பகுத்தறிவு மிகுந்த பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் மென்மைப்போக்கு அணியில் அதிகம் அவர்கள் பேச்சுவார்த்தை தான் தீர்வு தரும் என்று நம்பினார்கள். இந்த இரு போக்குகளால் கடந்த சில காங்கிரசு மாநாடுகளில் எந்த தீர்மானமும் எட்டவில்லை. அடுத்து வரும் மும்பை மாநாட்டில் காந்தியை நடுவராக பங்கேற்க இரு அணிகளும் அழைத்தார்கள்.

இரு தரப்பின் அழைப்பை பற்றி காந்தியடிகள் ஆர்டிஞ்சிடம் கூறினார். ஆர்டிஞ்சு காந்தியை பதட்டத்தை தணிக்க தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரவைத்ததாகவும் அதனால் மென்மைப்போக்கு அணிக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரவும் அறிவுறுத்தினார். மும்பை மாநாட்டில் காந்தி அப்படியே செய்தார். பார்ப்பன அணியான பயங்கரப் போக்கு அணி காந்தியை புறக்கணித்தனர். ஆங்கிலேயர்களின் கையாட்டி பொம்மை காந்தி என அவதூறு பரப்பினார்கள்.

1911ல் பெயரளவில் வங்காளத்தை மீண்டும் இணைத்திருந்தாலும் கிழக்கு பகுதியில் இசுலாமியர்கள் தான்  செல்வாக்கு கொண்டிருந்தார்கள். தங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வராத காந்தியை வங்காள இசுலாமியர்கள் காந்தியை ஏற்றுக்கொண்டார்கள். காந்தியின் உதவி மூலமாக வங்காளத்தை மீட்க தவறிய பிராமண காங்கிரசு அணி அதிரடி வழியாக போராட தொடங்கியது. முக்கிய புள்ளிகளாக பால் கங்காதர திலக், லாலா லாச்பத் ராய் மற்றும் பிபின் சந்திர பால் விளங்கினார்கள் (லால்-பால்-பால்). இவர்களின் வற்புறுத்தலால் காங்கிரசின் முதல் கட்ட உறுப்பினர்கள் வங்காளத்தின் கிழக்கு பகுதியில் வன்முறையில் ஈடுபட்டு இசுலாமியர்களை அச்சுறுத்தினார்கள். ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பதாக வெளியில் கூறினார்கள். பெருகிவரும் வன்முறையை கண்டு ஆர்டிஞ்சும் மென்மைப்போக்கு காங்கிரசினரும் கவலையடைந்தார்கள். காந்தியடிகளை ஏதாவது செய்து பார்ப்பன வன்முறையை கட்டுப்படுத்த கெஞ்சினார்கள். கெஞ்சலுக்கு மனம் இறங்கிய காந்தியடிகள் உலக வரலாற்றில் புகழ்ப்பெற்ற முடிவை அன்று எடுத்தார். மாளிகை வாழ்க்கையை விட்டார், ஆங்கிலேய ஆடைகளை கழற்றி கோவணத்தை அணிந்தார், வன்முறையற்ற புரட்சி என்கிற 'அகிம்சை'யை அறிமுகப்படுத்தினார்.

Comments

Popular posts from this blog

உதயர் தான் அடுத்த பெரியார்

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 5 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (2)

பார்ப்பன ஆதிக்க வரலாறு: பாகம் 4 - மங்கள் பாண்டே - மத வெறியின் உச்சகட்டம் (1)